2 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

கல்வராயன்மலையில் 2 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டது.

Update: 2021-03-03 18:39 GMT
கள்ளக்குறிச்சி, 

 கல்வராயன்மலையில் உள்ள எட்ரப்பட்டி கிராமத்தில் கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ராமநாதன் உத்தரவின் பேரில் கச்சிராயப்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி, தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள ஓடையோரத்தில் சாராயம் காய்ச்சுவதற்காக  2 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த சாராய ஊறலை கைப்பற்றி கீழே கொட்டி அழித்தனர். மேலும் இது தொடர்பாக சுப்பிரமணி என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்