வாக்காளர் விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் தொடங்கி வைத்தார்
ஊட்டியில் வாக்காளர் விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
ஊட்டி
தமிழக சட்டமன்றத்துக்கு அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் தேர்தல் தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கூடலூர் (தனி) ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இங்கு தேர்தல் குறித்து பொதுமக்களிடையே எல்.இ.டி. திரைக்கொண்ட வாகனங்கள் மூலம் விழிப்புணர்வு செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி விழிப்புணர்வு வாகன பிரசார தொடக்க நிகழ்ச்சி ஊட்டி மத்திய பஸ் நிலையத்தில் நடைபெற்றது.
இதில், மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கலந்து கொண்டு விழிப்புணர்வு பிரசாரத்தை தொடங்கி வைத்தார். அப்போது பஸ் நிலையத்தில் இருந்த பொதுமக்கள் விழிப்புணர்வு படத்தை பார்த்தனர். இந்த நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.