பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய வாலிபர் கைது
பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய வாலிபர் கைது
பெருமாநல்லூர்
பெருமாநல்லூரை அடுத்துள்ள காளம்பாளையம், எஸ்.பி.கே நகரில் பெண்களை வைத்து விபசாரம் நடப்பதாக பெருமாநல்லூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர். அப்போது அங்கு 25, 29 வயதுடைய 2 பெண்கள் இருந்தனர். அந்த பெண்களை போலீசார் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய சுகுமார் (வயழ 29) என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.