விளாத்திகுளம் அருகே 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்; வாலிபர் கைது

விளாத்திகுளம் அருகே 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-03-03 14:07 GMT
விளாத்திகுளம்:
விளாத்திகுளம் அருகே 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டர்.

ரேஷன் அரிசி பறிமுதல்

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புதூர்  சென்னமரெட்டிபட்டி சோதனை சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். 

அப்போது அந்த வழியாக புதூரில் இருந்து மதுரை நோக்கி சென்ற லோடு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 3 டன் ரேஷன் அரிசி 60 மூட்டைகளில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். 

வாலிபர் கைது

பின்னர் லோடு ஆட்டோவை ஓட்டி வந்த விருதுநகர் மாவட்டம் வண்ணாத்தி எந்தல் பகுதியைச் சேர்ந்த திருப்பதி மகன் அரி கிருஷ்ணன் (வயது 28) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினார்கள்.

மேலும் லோடு ஆட்டோவை போலீசார் பறிமுதல் செய்தனர்.இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி மற்றும் கைது செய்யப்பட்ட அரிகிருஷ்ணன் ஆகியோர் தூத்துக்குடி உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்