தூத்துக்குடி மாவட்டத்தில் 30 இடங்களில் கொரோனா தடுப்பூசி கலெக்டர் செந்தில்ராஜ் தகவல்
தூத்துக்குடி மாவட்டத்தில் 30 இடங்களில் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது என்று மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் 30 இடங்களில் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது என்று மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-
கொரோனா தடுப்பூசி
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொற்று வராமல் தடுக்க இரண்டு கட்டங்களாக தடுப்பூசி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் இலவசமாகவும், தனியார் மருத்துவமனைகளில் ரூ.250 செலுத்தியும் போடப்படுகிறது.
மார்ச் 1-ந் தேதி முதல் தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் தடுப்பூசி போடுவதற்கு தங்களை ஆன்லைன் மூலமாகவும், நேரடியாகவும் பதிவு செய்யலாம். பதிவு செய்ய ஆதார் அடையாள அட்டை, ரேஷன் அட்டை, வாக்காளர் அட்டை இதில் ஏதாவது ஒன்றை பயன்படுத்திக் கொள்ளலாம். பதிவு செய்த பின்பு தாங்கள் தடுப்பூசி போடப்பட வேண்டிய தேதி மற்றும் இடம் தெரிவிக்கப்படும். அன்றைய தினத்தில் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.
60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 45 முதல் 59 வயதுவரை இணைநோய் உள்ளவர்களுக்கும் (ரத்த கொதிப்பு, நீரிழிவு, இருதய நோய், சிறுநீரக நோய்கள்) முன்னுரிமை அளித்து போடப்படுகிறது. தடுப்பூசி காலை 9 மணி முதல் 4 மணி வரை போடப்படுகிறது.
30 இடங்கள்
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, திருச்செந்தூர் அரசு மருத்துவமனை, கருங்குளம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம், ஆழ்வார்திருநகரி அரசு ஆரம்ப சுகாதார நிலையம், புதுக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையம், காயாமொழி அரசு ஆரம்ப சுகாதார நிலையம்,
மெஞ்ஞானபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், ஏரல் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், முதலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கோவில்பட்டி மாவட்ட தலைமை மருத்துவமனை, விளாத்திகுளம் அரசு மருத்துவமனை, ஓட்டப்பிடாரம் அரசு மருத்துவமனை, ஒட்டநத்தம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம்,
புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், நாகலாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கீழஈரால் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம், குளத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், எட்டயபுரம் அரசு மருத்துவமனை, பசுவந்தனை அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கயத்தாறு அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கடம்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய 21 அரசு ஆஸ்பத்திரிகளிலும்,
கோவில்பட்டி ஆர்த்தி மருத்துவமனை, கோரம்பள்ளம் ஜெயந்த்நல்லதம்பி மருத்துவமனை, தூத்துக்குடி ராஜேஸ் திலக் மருத்துவமனை, தூய இருதய மருத்துவமனை, கோவில்பட்டி ஸ்ரீமருத்துவமனை, ஆத்தூர் சங்கர் மருத்துவமனை, கோவில்பட்டி வெங்கடேஷ்வரா மருத்துவமனை, பொதுநலமருத்துவமனை, ஏ.வி.எம். மருத்துவமனை ஆகிய 9 தனியார் ஆஸ்பத்திரிகளில் தடுப்பூசி போடப்படுகிறது.
தனிநபர் பாதுகாப்பே தேசத்தின் பாதுகாப்பு என்ற இலக்கை அடைந்திட பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.