வட்டமுத்தாம்பட்டி கெங்கம்மாள் கோவிலில் மாசித்திருவிழா

வட்டமுத்தாம்பட்டி கெங்கம்மாள் கோவிலில் மாசித்திருவிழா நடைபெற்று வருகிறது.

Update: 2021-03-02 22:58 GMT
சேலம்:
வட்டமுத்தாம்பட்டி கெங்கம்மாள் கோவிலில் மாசித்திருவிழா நடைபெற்று வருகிறது.
மாசித்திருவிழா
சேலம் சர்க்கார்கொல்லப்பட்டியை அடுத்த வட்டமுத்தாம்பட்டியில் உள்ள கெங்கம்மாள் கோவிலில் மாசித்திருவிழா நேற்று தொடங்கியது. இதையொட்டி அம்மனுக்கு நேற்று இரவு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து  கெங்கம்மாள் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. 
மேலும் வாணவேடிக்கை முழங்க சத்தாபரணம் நடைபெற்றது. இன்று (புதன்கிழமை) அம்மனுக்கு பால் குடம் எடுத்தல், ஆடை ஆபரண அலங்காரம் செய்தல், கூழ்படைத்தல் நிகழ்ச்சியும், மாலை 6 மணிக்கு விளையாட்டு போட்டிகளும், மாணவ-மாணவிகளுக்கு நடனபோட்டியும் நடக்கிறது.
நாளை
 நாளை (வியாழக்கிழமை) காலை 6 மணிக்கு மாவிளக்கு எடுத்தல், சக்தி கரகம் எடுத்தல், பூக்கரகம், சேத்துமுட்டி எடுத்தல் போன்றவை நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து அம்மனுக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. பின்னர் பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்துகிறார்கள். 
மாலை 6 மணிக்கு பூ மிதித்தல், அக்னி கரகம் எடுத்தல், அலகு குத்துதல் போன்றவை நடைபெற உள்ளது. நாளைமறுநாள் (வெள்ளிக்கிழமை) மஞ்சள் நீராடுதல் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்