லாரியில் இருந்து எண்ணெய் பெட்டிகள் திருட்டு

லாரியில் இருந்து எண்ணெய் பெட்டிகள் திருட்டு

Update: 2021-03-02 19:52 GMT
சோழவந்தான், மார்ச்
திருமங்கலம் அருகே உள்ள வில்லூரை சேர்ந்தவர் கணேசன் (வயது 40). இவர் கோவையில் இருந்து பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தேங்காய் எண்ணெய் பெட்டிகளை லாரியில் ஏற்றிக்கொண்டு மதுரை நோக்கி வந்து கொண்டிருந்தார். சோழவந்தான் அருகே திண்டுக்கல்-மதுரை நான்கு வழிச்சாலையில் நகரி கிராமத்தில் லாரியை நிறுத்திவிட்டு அங்குள்ள ஒரு உணவகத்துக்கு சாப்பிட சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது லாரியின் மேலே போட்டிருந்த தார்ப்பாய் கிழிக்கப்பட்டு 25 தேங்காய் எண்ணெய் பெட்டிகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இது குறித்த புகாரின் பேரில் சோழவந்தான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், “போலீசாரின் அறிவுறுத்தலின் பேரில் பல இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகிறது. ஆனால் இதனை முறையாக செயல்படுத்துவது இல்லை. தொடர்ந்து கேமராக்கள் இயங்குகின்றனவா என்று கண்காணிப்பது இல்லை. நான்கு வழிச்சாலை மற்றும் 46 நம்பர் ரோடு பகுதிகளில் வாகனங்களில் கொள்ளைச் சம்பவம் மற்றும் வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. எனவே கண்காணிப்பு கேமராக்கள் சரியாக இயங்குகின்றனவா என்று அவ்வப்போது ஆய்வு செய்திட வேண்டும். தேவைப்படும் பகுதிகளில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்களை நிறுவ வேண்டும்.
போலீசார் இரவு நேர ரோந்துப்பணியை தீவிரப்படுத்திட வேண்டும். போலீசாரை கூடுதலாக நியமிக்க வேண்டியதும் அவசியமாகும்.” என்றனர்.

மேலும் செய்திகள்