கலெக்டர் அலுவலகத்தை சுய உதவிக்குழுவினர் முற்றுகை
அாியலூாில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை சுய உதவிக்குழு பெண்கள் முற்றுகையிட்டனர்.
தாமரைக்குளம்:
முற்றுகை
சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டு, அலுவலக வளாகத்தில் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. அந்த பெட்டியில் பொதுமக்கள், தங்கள் மனுக்களை போட்டுச்சென்றனர். இந்நிலையில் நேற்று அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு, பருக்கல் கிராமம் மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் ஏராளமானவர்கள் வந்து முற்றுகையிட்டனர்.
அப்போது அவர்கள் கூறுகையில், எங்கள் குழுக்கள் சார்பில் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடனுக்கான தவணைக்காலம் முடிவதற்கு முன்ேப, கடந்த டிசம்பர் மாதத்தில் தவணைத்தொகை முழுவதையும் செலுத்திவிட்டு, மீண்டும் கடன் பெற்றுக்கொள்ளுமாறு அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் ஒரு குழுவுக்கு ரூ.6 லட்சம் என 4 குழுக்களுக்கு ெமாத்தம் ரூ.24 லட்சம் கடன் தருவதாக கூறினர். இதனால் நாங்கள் தவணைத்தொகை முழுவதையும் செலுத்திவிட்டோம்.
கடன் வழங்க வேண்டும்
இந்நிலையில், மகளிர் சுய உதவி குழுக்கள், கூட்டுறவு சங்கங்களில் பெற்ற கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்-அமைச்சர் அறிவித்தார். ஆனால் நாங்கள் கடன் தொகையை முன்னதாகவே செலுத்திவிட்டதாலும், நாங்கள் கடன் தொகைைய செலுத்தி 3 மாதங்கள் ஆகியும், எங்களுக்கு கடன் வழங்கப்படாததாலும் எங்களுக்கு கடன் தள்ளுபடி கிடைக்கவில்லை. புதிதாக எங்களுக்கு கடன் வழங்கியிருந்தால், அந்த தொகை தள்ளுபடி ஆகியிருக்கும்.
எனவே எங்களது பெயரில் கடன் ஆவணங்களை பயன்படுத்தி அதிகாரிகள் முறைகேடு செய்துள்ளார்களா? என்ற சந்தேகம் உள்ளது. மேலும் எங்களுக்கு புதிதாக கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றும் தெரிவித்தனர். இது தொடர்பாக கலெக்டரிடம் அவர்கள் மனு அளித்தனர்.