தலையில் கல்லைப்போட்டு மதுரை பெண் கொலை

தலையில் கல்லைப்போட்டு மதுரை பெண் கொலை

Update: 2021-03-02 18:35 GMT
பரமக்குடி
நடத்தையில் சந்தேகப்பட்டு தலையில் கல்லைப்போட்டு மதுரை பெண்ணை கொன்ற கணவரை போலீசார் கைது செய்தனர்.
நடத்தையில் சந்தேகம்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மருதுபாண்டியர் நகரைச் சேர்ந்தவர் வெற்றிச்செல்வன் (வயது 31). இவர் பூவளத்தூரில் உள்ள செங்கல்சூளையில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அவருடைய மனைவி சரண்யா (27). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
மனைவி சரண்யா மற்றும் குழந்தைகள் மதுரை வண்டியூரில் தனியாக வசித்து வந்தனர். வெற்றிச்செல்வன் வேலை காரணமாக பரமக்குடி மருதுபாண்டியர் நகரில் வாடகைக்கு அறை எடுத்து தங்கி இருந்தார். இந்தநிலையில் மனைவியின் நடத்தையில் வெற்றிச்செல்வனுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மனைவி மீது அவர் ஆத்திரத்தில் இருந்துள்ளார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் மனைவி சரண்யாவை பரமக்குடிக்கு வருமாறு வெற்றிச்செல்வன் அழைத்துள்ளார். இதைதொடர்ந்து அவரும் அங்கு ெசன்றார். வெற்றிச்செல்வன் தான் தங்கியிருந்த அறைக்கு அவரை அழைத்துச் சென்றார். 
கல்லைப்போட்டு கொலை
இரவில் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த வெற்றிச்செல்வன், மனைவி சரண்யாவின் தலையில் கல்லை தூக்கிப் போட்டார்.  இதில் படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பின்பு வெற்றிச்செல்வன் பரமக்குடி போலீஸ் நிலையத்திற்கு சென்று சரண் அடைந்தார். 
போலீசார் நடத்திய விசாரணையில், மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தினால் அவரை கொலை செய்தேன் என கூறியுள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வெற்றிச்செல்வனை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்