எந்த ஊருக்கு போகுதுங்க...?
அரசு ஏ.சி.பஸ்சில் பெயர் பலகை இல்லை.எந்த ஊருக்கு போகுது என தெரியவில்லை.
காரைக்குடி,
காரைக்குடியில் இருந்து திருச்சி வரை இயக்கப்படும் அரசு ஏ.சி. பஸ்சில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் பெயர் பலகை அமைக்கப்பட்டு உள்ளது. அந்த பஸ்சின் பெயர் பலகையில் ஊர் பெயர் தெரியாததால் அந்த பஸ் எந்த ஊருக்கு போகுதுங்க...?என பயணிகள் குழப்பம் அடைந்தனர். பஸ்சை வழிமறித்து நடத்துனரிடம் எந்த ஊருக்கு இந்த பஸ் செல்கிறது என்று கேட்டு தெரிந்த பின்னரே பயணிகள் அதில் ஏறி சென்றதை காண முடிந்தது. இந்த தொழில்நுட்ப கோளாறை சரி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.