முடுக்குப்பட்டி கடற்கரை கிராமத்தில் கரை ஒதுங்கிய அரிய வகை ஆமை
கரை ஒதுங்கிய அரிய வகை ஆமை
மணமேல்குடி:
மணமேல்குடி அருகே கட்டுமாவடி அடுத்துள்ள முடுக்குப்பட்டி கடற்கரை கிராமத்தில் அரியவகை ஆமை ஒன்று கரை ஒதுங்கியது. இதுகுறித்து தகவலின் பேரில் அறந்தாங்கி வனச்சரக அலுவலர் சதாசிவம், வனவர் அன்புமணி ஆகியோர் கொண்ட வனத்துறை அதிகாரிகள் கடற்கரை பகுதிக்கு சென்று அங்கு கரை ஒதுங்கிய சித்தாமை என்ற அரியவகை ஆமையை மீட்டு படகின் மூலம் ஆழமான கடலில் கொண்டு சென்று விட்டனர். மேலும் இந்த கடல் ஆமை உணவுத்தேடி கரைப்பகுதிக்கு வந்திருக்கலாம். இந்த அரிய வகை ஆமைகளை பிடித்து, தீங்கு விளைவித்தால் கடல் வாழ் உயிரின பாதுகாப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.