தூத்துக்குடி மாவட்டத்தில் 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

தூத்துக்குடி மாவட்டத்தில் 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

Update: 2021-03-02 12:53 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை, கொலை முயற்சி வழக்குகளில் தொடர்புடைய 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

கொலை-கொலை முயற்சி வழக்கு

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் ஆவரங்காடு நடுத்தெருவை சேர்ந்தவர் வேல்சாமி மகன் முத்துமாரியப்பன் (வயது 37). இவரை ஓட்டப்பிடாரம் போலீசார் ஒரு கொலை வழக்கு தொடர்பாக கைது செய்தனர்.

இதேபோல் நெல்லை மாவட்டம் வீரமாணிக்கபுரம் புதுகாலனியை சேர்ந்த சுரேஷ் மகன் சபரிமணி (21), பொன்ராஜ் மகன் முருகபெருமாள் என்ற விக்கி (23) ஆகியோரை கொலை முயற்சி வழக்கில் கயத்தாறு போலீசார் கைது செய்தனர். 

குண்டர் சட்டம் பாய்ந்தது

இவர்கள் 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பரிந்துரை செய்தார். அதன்பேரில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் முத்துமாரியப்பன், சபரிமணி, முருகபெருமாள் ஆகிய 3 பேரையும் கைது செய்ய உத்தரவிட்டார். 

இதற்கான உத்தரவு நகலை சம்பந்தப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பாளையங்கோட்டை ஜெயிலில் வழங்கினார்கள். 

மேலும் செய்திகள்