தூத்துக்குடியில் தொழிலாளி விஷம் குடித்து சாவு
தூத்துக்குடியில் தொழிலாளி விஷம் குடித்து பரிதாபமாக இறந்தார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி தாளமுத்துநகர் மாதாநகரை சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது 44). தச்சு தொழிலாளியான இவர் கடன் தொல்லையால் அவதிப்பட்டார்.
இதனால் மனம் உடைந்த ராமமூர்த்தி தாளமுத்துநகர் மொட்டைகோபுரம் கடற்கரை பகுதியில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில் தாளமுத்துநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.