சட்டசபை தேர்தலை முன்னிட்டு பண்ணாரி சோதனை சாவடியில் போலீசார் தீவிர வாகன சோதனை

சட்டசபை தேர்தலை முன்னிட்டு பண்ணாரி சோதனை சாவடியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

Update: 2021-03-02 00:57 GMT
சத்தியமங்கலம்
சட்டசபை தேர்தலை முன்னிட்டு பண்ணாரி சோதனை சாவடியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். 
சட்டசபை தேர்தல் 
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி நடைபெறுகிறது என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தன. 
மேலும் அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வினியோகம் செய்வதை தடுக்க மாநிலம் முழுவதும் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். 
அதன்படி ஈரோடு மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக மாவட்ட எல்லை மற்றும் மாநில எல்லைகளில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். 
வாகன சோதனை
தேர்தலை முன்னிட்டு சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரியில் சோதனை சாவடி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சோதனை சாவடி தமிழகம் மற்றும் கர்நாடாக எல்லை பகுதியில் அமைந்து உள்ளது. 
இதனால் இங்கு போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த கார், சரக்கு ஆட்டோ, சரக்கு வேன் மற்றும் லாரிகள் உள்பட அனைத்து வாகனங்களையும் தடுத்து நிறுத்தி தீவிர சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனை இரவு, பகலாக தொடர்ந்து 24 மணி நேரமும் நடைபெற்று வருகிறது.

மேலும் செய்திகள்