நீலகிரி மாவட்டத்தில் தேர்தல் விதிமீறலை கண்காணிக்க 30 குழுக்கள் அமைப்பு

நீலகிரி மாவட்டத்தில் தேர்தல் விதிமீறலை கண்காணிக்க 30 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளதாக நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.

Update: 2021-03-01 23:13 GMT
ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கூடலூர் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறப்படுகிறதா என்பதை கண்காணிக்க 9 பறக்கும் படைகள், 9 நிலையான கண்காணிப்பு குழுக்கள், 3 வீடியோ பதிவு குழுக்கள், 3 வீடியோ கண்காணிப்பு குழுக்கள், 3 தேர்தல் செலவின கண்காணிப்பு குழுக்கள், 3 தேர்தல் நடத்தை விதிமுறைகள் கண்காணிப்பு குழுக்கள் என்று மொத்தம் 30 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. 

மாவட்டத்தில் இதுவரை நடத்தப்பட்ட சோதனையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்ற ரூ.20 லட்சத்தை 73 ஆயிரத்து 800 பறிமுதல் செய்யப்பட்டது.

பதற்றமான வாக்குச்சாவடிகள்

மேலும் பரிசு பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது. 
தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். 

மேலும் சி விஜில் என்ற செயலி மூலம் புகார்களை தெரிவிக்கலாம். மாவட்டத்தில் 868 வாக்குச்சாவடிகள் உள்ளன. அதில் 112 வாக்குசாவடிகள் பதற்றமானவை ஆகும். 

மாவட்ட கண்காணிப்பு அதிகாரியுடன் இணைந்து பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்