சேலம் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பெட்டியில் மனுக்களை போட்டு சென்றனர்.
சேலம்:
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பெட்டியில் மனுக்களை போட்டு சென்றனர்.
கூட்டம் ரத்து
தமிழக சட்டசபை தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் நடக்கும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வரும் பொதுமக்களின் வசதிக்காக கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு பெட்டி ஒன்று வைக்கப்பட்டுள்ளது.
பெட்டி
நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற இருந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
இதனால் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து மனு கொடுக்க வந்திருந்த பொதுமக்கள் அதனை கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு வைக்கப்பட்டிருந்த பெட்டியில் போட்டு சென்றனர். அந்த மனுக்கள் அனைத்தையும் துறை வாரியாக பிரித்து நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் ராமன் அறிவுறுத்தினார்.