அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம்
பாவூர்சத்திரத்தில் அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.
பாவூர்சத்திரம், மார்ச்:
தென்காசி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பாவூர்சத்திரத்தில் உள்ள மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.செல்வ மோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாவட்ட அவைத்தலைவர் சண்முகசுந்தரம் வரவேற்றார்.
கூட்டத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் பூத் கமிட்டி அமைப்பது மற்றும் தேர்தல் பணிகள் குறித்து கட்சியினருக்கு, மாவட்ட செயலாளர் ஆலோசனைகள் வழங்கினார். கூட்டத்தில் கட்சி பொருளாளர் சாமிநாதன், கீழப்பாவூர் ஒன்றிய செயலாளர்கள் அமல்ராஜ் (மேற்கு), இருளப்பன் (கிழக்கு) மற்றும் ஆலங்குளம், தென்காசி, கடையம், பாப்பாகுடி, ஒன்றிய செயலாளர்கள் மற்றும் நகர, ஒன்றிய, பேரூர் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.