ஆலோசனை கூட்டம்

ஆலோசனை கூட்டம்

Update: 2021-03-01 20:05 GMT
சாத்தூர், 
சாத்தூரில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சாத்தூா் சட்டமன்ற தோ்தல் அலுவலர்  புஷ்பா தலைமையில் அனைத்து கட்சியினா் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 
இந்த கூட்டத்தில் சாத்தூர் சட்டமன்ற தேர்தல் உதவி அலுவலர் வெங்கடேஷ், சாத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமகிருஷ்ணன், அ.தி.மு.க, தி.மு.க, காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ், கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், பா.ம.க, புதிய தமிழகம் உள்ளிட்ட அனைத்து கட்சியினர் கலந்து கொண்டனர். தேர்தல் விதிமுறைகளை பின்பற்றி அரசியல் கட்சியினர் பொதுக்கூட்டங்கள் நடத்த வேண்டும்.  அரசு கூறிய விதிமுறைகளை முறையாக பின்பற்றுமாறும், அமைதியான முறையில் தேர்தலை நடத்தி முடிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

மேலும் செய்திகள்