அனைத்து கட்சியினருடன் ஆலோசனை கூட்டம்
தேர்தல் நடத்தை விதிமுைறகள் குறித்து அனைத்து கட்சியினருடன் ஆலோசனை கூட்டம் அருப்புக்கோட்டையில் நடந்தது.
அருப்புக்கோட்டை,
தேர்தல் நடத்தை விதிமுைறகள் குறித்து அனைத்து கட்சியினருடன் ஆலோசனை கூட்டம் அருப்புக்கோட்டையில் நடந்தது.
ஆலோசனை கூட்டம்
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்து வருகிறது.
இந்தநிலையில் அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கான அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளருக்கான தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம் அருப்புக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது.
அனைத்து கட்சியினர்
கூட்டத்திற்கு தேர்தல் நடத்தும் அலுவலர் முருகேசன் தலைமை தாங்கினார்.
உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ரவீந்திரன்ஞானராஜ், உதவி தேர்தல் அலுவலர்கள் ரவிச்சந்திரன், கருப்பசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.கட்சி, ம.தி.மு.க., கம்யூனிஸ்டு, அ.ம.மு.க, மக்கள் நீதி மய்யம், விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்பட அனைத்துக் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தனிநபர் இடங்களில் விளம்பரம் மற்றும் சுவரொட்டிகளின் உரிமையாளரின் அனுமதி பெறாமல் அமைக்க கூடாது.
வாக்காளர் மற்றும் தேர்தல் ஆணையத்தால் அனுமதி வழங்கப்பட்ட நபர்கள் தவிர வேறு எவரும் வாக்குச்சாவடிக்கு செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது. ஊர்வலத்தில் முறையற்ற வாசகங்களை பயன்படுத்தல் கூடாது என்பன உள்பட தேர்தல் நடத்தை விதிமுைறகள் குறித்து கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டது.