விருதுநகர்,
விருதுநகர் அருகே உள்ள பாவாலி கிராமத்தில் மதுக் கடை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அங்கு ஒரு வீட்டில் மது வினியோகம் நடைபெறுவதாகவும் இதனால் கிராமத்தில் உள்ள சிறுவர்களுக்கும், இளைஞர்களுக்கும், பெண்களுக்கும் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளதால் இதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க கோரி மகளிர் கூட்டமைப்பினர் மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுத்துள்ளனர்.