கடலாடி பகுதிகளில் கஞ்சா விற்பனையை தடுக்க கடலாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் தீபா, சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகைராஜா தலைமையிலான போலீசார் அங்கு ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது கடலாடி இந்திராநகரில் சோதனை மேற்கொண்டதில் அப்பகுதியை சேர்ந்த முனியசாமி மகன் சண்முகையா பாண்டியன் (வயது 25) என்பவரது வீட்டில் இருந்து 3 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். கஞ்சா வைத்திருந்த சண்முகையாபாண்டியனை கைது செய்தனர்.