கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடக்கம்
கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.
தோகைமலை
தோகைமலை வட்டார மருத்துவர் தியாகராஜன் நிருபர்களிடம் கூறுகையில்,
தோகைமலை அரசு மருத்துவமனையில் நேற்று முதல் 40 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள், பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. எனவே தோகைமலை, பாதிரிப்பட்டி, சின்னரெட்டிபட்டி, நாகனூர், கீழவெளியூர், கழுகூர் மற்றும் பல்வேறு கிராமங்களில் உள்ள ஆண்கள், பெண்கள் தோகைமலை அரசு மருத்துவமனைக்கு வந்து கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றார். அப்போது, சுகாதார மேற்பார்வையாளர் ராமசாமி, சுகாதார ஆய்வாளர்கள் பொன்னுசாமி, சவுந்தரராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.