தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை
கீழ்வேளூர் அருகே தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
சிக்கல், மார்ச்:
கீழ்வேளூர் அருகே தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
வாகன சோதனை
தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 6-ந் தேதி நடைபெறுகிறது. இதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர், ஜெயசித்ரகலா மற்றும் உதவி தேர்தல் அலுவலர் மாரிமுத்து ஆகியோர் தலைமையில் 6 தேர்தல் பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் நேற்று தேர்தல் பறக்கும் படையினர் தஞ்சாவூர்- நாகை தேசிய நெடுஞ்சாலையில் கீழ்வேளூர் அருகே கானூர் சோதனை சாவடியில் துணை தாசில்தார் திலகா, சிறப்பு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் தமிழ்மணி மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
பணம்-பரிசு பொருட்கள்
வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து வேளாங்கண்ணி, நாகூர், திருநள்ளாறு செல்லும் பக்தர்களின் கார், வேன், பஸ்கள் அனைத்தும் தீவிர சோதனை செய்யப்பட்டது. பரிசு பொருட்கள் மற்றும் உரிய ஆவணங்கள் இன்றி பணம் மற்றும் பரிசு பொருட்கள் எடுத்து செல்லப்படுகிறதா? என சோதனை செய்தனர். அரசியல் கட்சியினர் சென்ற வாகனங்களில் கட்டப்பட்டிருந்த கட்சி கொடிகளை அகற்றுமாறு அறிவுறுத்தினர்.