பச்சையம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

அப்பம்பட்டில் பச்சையம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

Update: 2021-03-01 14:58 GMT
செஞ்சி, 

செஞ்சி அருகே அப்பம்பட்டு கிராமத்தில் உள்ள செல்வ விநாயகர், பச்சையம்மன, மாரியம்மன், காளியம்மன் மற்றும் நவக்கிரக பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதையொட்டி யாகசாலையில் சிறப்பு யாகம் மற்றும் பூஜைகள் நடந்தது. பின்னர் யாகசாலையில் இருந்து புனிதநீர் அடங்கிய கலசம் எடுத்துச்செல்லப்பட்டு, கோவில் கோபுரத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் மூலவர்களுக்கு மகா அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர். 

மேலும் செய்திகள்