திருச்சி கலெக்டர் அலுவலக சாலையில் பீறிட்டு பாய்ந்த கழிவுநீரால் மக்கள் அவதி
திருச்சி கலெக்டர் அலுவலக சாலையில் கழிவு நீர் பீறிட்டு பாய்ந்ததால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
திருச்சி, மார்ச்.1-
திருச்சி கலெக்டர் அலுவலக சாலையில் பெரிய மிளகுபாறை அருகே நேற்று காலை திடீரென சாலையில் பள்ளம் ஏற்பட்டது. அந்தபள்ளத்தின் வழியாக பாதாள சாக்கடை கழிவுநீர் பீறிட்டுப் பாய்ந்தது. ஒரு ஆள் உயரத்திற்கு பீறிட்டு பாய்ந்த இந்த கழிவுநீரால் அந்த சாலையில் சென்ற பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். துர்நாற்றத்துடன் வெளியேறிய கழிவுநீர் சாலை முழுவதும் தேங்கியது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் செசன்சு கோர்ட்டு போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் அங்கு விரைந்து வந்தனர். பாதாள சாக்கடை கழிவு நீர் செல்லும் மெயின் குழாயில் அடைப்பு ஏற்படுத்தினர். அதன்பின்னரே பீறிட்டு பாய்ந்து கழிவு நீர் வெளியேறியது கட்டுப்படுத்தப்பட்டது.