ஸ்ரீவில்லிபுத்தூர்,
நாகர்கோவிலில் ‘ஜப்பான் சிட்டோரியு சார்பில் கராத்தே டூ - இந்தியா’ அகில இந்திய ஓபன் கராத்தே போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் இருந்து இண்டர்நேஷனல் சோட்டோகான் கராத்தே அகாடமி ஆப் இந்தியா சார்பில் சென்சாய், , செபஸ்தியான் தலைமையில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். இதில் மாணவர்கள் ஹரிகிருஷ்ணன், அருண் குமார், கபிலன், கோகுல் கிருஷ்ணன், பாலஹரிகரன், சிவகுமார் ஜனா ஆகியோர் சாதனை படைத்து வெற்றி பெற்றனர். இவர்களை பெற்றோர்களும், சோட்டோகான் கராத்தேபள்ளி ஆசிரியர்களும் பாராட்டினர்.