கந்தம்பாளையத்தில் சிறுமியை திருமணம் செய்த தொழிலாளி கைது

கந்தம்பாளையத்தில் சிறுமியை திருமணம் செய்த தொழிலாளி கைது

Update: 2021-02-28 18:03 GMT
கந்தம்பாளையம்:
கந்தம்பாளையம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் கந்தசாமி. இவருடைய மகன் சக்தி (வயது 27). கூலித்தொழிலாளி. இவருக்கும், கடலூர் மாவட்டம் உறையூரை சேர்ந்த அண்ணாமலையின் மகள் அகல்யா (16) என்பவருக்கும் மணியனூர் அங்காளம்மன் கோவிலில் திருமணம் நடைபெற்றது. இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதுகுறித்து அறிந்த நாமக்கல் ஒருங்கிணைந்த சேவை மையம் சமூகநலத்துறை மைய நிர்வாகி வித்யா நல்லூர் போலீஸ் நிலையத்தில் சிறுமியை திருமணம் செய்ததாக சக்தி மீது புகார் மனு அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்தியை கைது செய்தனர்.
=======

மேலும் செய்திகள்