கிணற்றில் தவறி விழுந்த ஆடு உயிருடன் மீட்பு
கிணற்றில் தவறி விழுந்த ஆடு உயிருடன் மீட்கப்பட்டது.
அந்தியூர்
அந்தியூர் அருகே உள்ள பிரம்மதேசம் பகுதியை சேர்ந்தவர் செங்கோடன் (வயது 45). இவரது ஆடு அந்த பகுதியில் மேய்ந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் எதிர்பாராதவிதமாக ஆடு அருகே உள்ள 60 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்துவிட்டது. இதில் ஆடு 30 அடி ஆழ தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்தது. இதை பார்த்த செங்கோடன் அந்தியூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார்.
அதன்பேரில் நிலைய அதிகாரி ஜேசுராஜ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்றனர். பின்னர் கயிறு கட்டி கிணற்றில் இறங்கி ஆட்டை உயிருடன் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.