பொதுக்கூட்டம்-பேரணி நடத்த அரசியல் கட்சிகளுக்கு கட்டுப்பாடு
பொதுக்கூட்டம்-பேரணி நடத்த அரசியல் கட்சிகளுக்கு கட்டுப்பாடு
தேர்தல் நடத்தை விதிகள் அமல்:
பொதுக்கூட்டம்-பேரணி நடத்த அரசியல் கட்சிகளுக்கு கட்டுப்பாடு
திருச்சி, பிப்.28-
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் பொதுக்கூட்டம் மற்றும் பேரணி நடத்த அரசியல் கட்சிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
பொதுக்கூட்டம்
அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் தங்களது கூட்டம் நடத்தும் இடம் மற்றும் நாள் உள்ளிட்ட விவரங்களை முன்கூட்டியே இணையதளம் மூலம் விண்ணப்பித்து தேர்தல் நடத்தும் அலுவலரிடம் இருந்து அனுமதி பெற வேண்டும். இதன் மூலம் காவல்துறை, போக்குவரத்து மற்றும் பொதுஅமைதியினை சீர் செய்வதற்கு திட்டமிட ஏதுவாக இருக்கும்.
பொதுக்கூட்டம் நடத்துவதற்கு தடையாணை பிறப்பிக்கப்பட்ட பகுதிகளை முன்னரே அறிந்து அதற்கு ஏற்றவாறு பொதுக்கூட்டம் நடத்தும் இடத்தை தேர்வு செய்ய வேண்டும்.
பொதுக்கூட்டங்களுக்கு இடையூறு விளைவிக்கும் நபர்களை அப்புறப்படுத்த காவல்துறையின் உதவியை நாட வேண்டும்.
பொதுக்கூட்டங்களை நடத்தும் அமைப்பாளர்கள் தன்னிச்சையாக நடவடிக்கை எடுத்தல் கூடாது.
பணம் கொடுத்தோ அல்லது வேறு வகையிலோ வாக்காளர்களை தூண்டிவிடக்கூடாது.
பல்வேறு சாதிகள், சமூகங்கள் அல்லது மதமொழி குழுக்களிடையே வெறுப்பு மற்றும் வேறுபாடுகளை ஏற்படுத்தும் வகையில் பிரசாரம் செய்தல் கூடாது.
தனிநபர் விமர்சனம்
தலைவர்கள் மற்றும் இதர நபர்கள் பற்றிய தனிப்பட்ட வாழ்க்கை முறை பற்றி விமர்சனம் செய்யக்கூடாது.
கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் மற்றும் பிற வழிபாட்டு தலங்களில் தேர்தல் பிரசாரம் செய்தல், சுவரொட்டிகள் ஒட்டுதல், பிரசாரம் சம்பந்தப்பட்ட பாடல்களை இசைத்தல் போன்ற செயல்களை செய்யக்கூடாது.
தனிநபர்களின் கட்டிடம், சுற்றுச்சுவர், வாகனங்கள் போன்றவற்றில் சுவரொட்டிகளை ஒட்டவோ, பதாகைகள் வைக்கவோ, தேர்தல் முழக்கங்களை எழுதவோ, கொடிகளை கட்டவோ, முன் அனுமதி பெற வேண்டும்.
பிற அரசியல் கட்சிகளின் பொது கூட்டங்களிலோ அல்லது ஊர்வலங்களிலோ இடையூறுகள் ஏற்படுத்தக்கூடாது.
பிற அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களின் சுவரொட்டிகளை நீக்கவோ, சேதப்படுத்தவோ கூடாது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் எழுத்து பூர்வமான முன்அனுமதி பெறாமல் பொதுக்கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்களில் ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்தக்கூடாது.
பேரணி
அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் பேரணி நடத்திட உத்தேசித்திருப்பின் பேரணி ஆரம்பிக்கும் இடம், முடியும் இடம், செல்லும் வழித்தடம், நாள் மற்றும் நேரம் உள்ளிட்ட விவரங்களை முன்கூட்டியே தெரிவித்து தேர்தல் நடத்தும் அலுவலரிடம் இருந்து அனுமதி பெற வேண்டும்.
பேரணிக்கான நிகழ்ச்சி நிரலில் சாதாரணமான மாற்றங்களை மேற்கொள்ளலாம். பேரணி ஏற்பாடு செய்யும் அமைப்பாளர்கள் முன்கூட்டியே அதன் விவரங்களை தெரிவிப்பதன் மூலம் காவல்துறையினர் தேவையான முன்னேற்பாடுகளை செய்திட ஏதுவாக இருக்கும்.
பேரணி செல்லும் வழியில் உள்ள தடையாணைகள் பற்றி அறிந்து அதை பின்பற்றி நடக்க வேண்டும். பேரணியின்போது, போக்குவரத்து விதிகள் மற்றும் கட்டுப்பாடுகளை கவனமாக பின்பற்றிட வேண்டும்.
பேரணி ஏற்பாடு செய்யும் அமைப்பாளர்கள் முன்கூட்டியே பேரணி செல்லும் பாதையை முடிவு செய்வதன் மூலம் போக்குவரத்துக்கு இடையூறோ அல்லது தடையோ ஏற்படாத வண்ணம் இருக்கும்.
இதர கட்சிகளுடன் மோதல்