நெல்லையில் என்ஜினீயர் தற்கொலை

நெல்லையில் என்ஜினீயர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-02-27 22:05 GMT
நெல்லை:

நெல்லை கொக்கிரகுளம் செல்வ விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் பாபு. இவரது மகன் அஜித் பாஸ்டின் (வயது 24), என்ஜினீயர். இவர் மதுரையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அஜித் பாஸ்டின் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு விடுப்பு எடுத்து விட்டு சொந்த ஊருக்கு வந்தார். அவர் யாரிடமும் பேசாமல் இருந்து வந்துள்ளார். மேலும் நண்பர்களையும் சந்திக்க வெளியே செல்லாமல் இருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த பாளையங்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள் அஜித் பாஸ்டின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்