காவிரி குடிநீரில் குழாயில் உடைப்பு
காவிரி குடிநீரில் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.
நச்சலூர்
திருச்சி மாவட்டம், ஜீயபுரம் காவிரி ஆற்றில் ஆழ்துளை கிணறு அமைத்து நீரேற்று நிலையத்தில் இருந்து ராட்சத குழாய் மூலம் நீர் எடுக்கப்படுகிறது. பின்னர் குழுமணி- கவண்டம்பட்டி சாலை வழியாக நெய்தலூரில் உள்ள துணை நீரேற்று நிலையத்தில் தண்ணீர் சேமிக்கப்படுகிறது. அதன்பின்னர் புதுக்கோட்டைக்கு செல்கிறது. இ்ந்தநிலையில், கவண்டம்பட்டி பஸ் நிறுத்தம் அருகே உள்ள ராட்சத குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல நாட்களாக தண்ணீர் வீணாக சாலையில் ஓடுகிறது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, உடனடியாக குடிநீர் உடைப்பை சரிசெய்ய வேண்டும் என அப்பகுதி பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.