தூக்குப்போட்டு பெண் தற்கொலை

தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-02-27 19:14 GMT
கரூர்
கரூர் தெற்கு காந்திகிராமம் இந்திராநகரை சேர்ந்தவர் ராஜலட்சுமி (வயது 26). இவருக்கும், செந்தில்குமார் என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில், ராஜலட்சுமிக்கும் அவரது கணவரின் குடும்பத்தினருக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட ராஜலட்சுமி நேற்று முன்தினம் தூக்கில் தொங்கினார். இதைக்கண்ட உறவினர்கள் ராஜலட்சுமியை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ராஜலட்சுமியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தற்கொலை குறித்து தாந்தோணிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காளிமுத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்