புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில் போதை மாத்திரைகள், ஊசி விற்பனை அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் கணேஷ்நகர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் முகமது ஜாபர் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மச்சுவாடி பகுதியில் போதை மாத்திரைகள், ஊசிகள் விற்ற அதே பகுதியை சேர்ந்த ரமேசை (வயது34) போலீசார் கைது செய்தனர். மற்றொருவர் தப்பியோடினார். கைதானவரிடம் இருந்து 15 மாத்திரைகள், ஊசிகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பியோடிய சூர்யா என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.