தூத்துக்குடியில் ரூ.20 லட்சத்தில் நவீன ஆவின் பாலகம் திறப்பு
தூத்துக்குடியில் ரூ.20 லட்சத்தில் நவீன ஆவின் பாலகம் திறக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி, பிப்:
தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் (ஆவின்) மூலம், ரூ.20 லட்சம் மதிப்பில் தூத்துக்குடி ராஜாஜி பூங்கா வளாகத்தில் அதிநவீன வசதிகள் கொண்ட குளிரூட்டப்பட்ட பாலகம் அமைக்கப்பட்டு உள்ளது. அதன் திறப்பு விழா நடந்தது. விழாவுக்கு தூத்துக்குடி மாவட்ட ஆவின் தலைவர் என்.சின்னத்துரை தலைமை தாங்கி திறந்து வைத்து பேசினார்.
நிகழ்ச்சியில், ஆவின் பொது மேலாளர் சி.ராமசாமி, கூட்டுறவு சங்க துணை பதிவாளர் (பால்வளம்) கணேசன், ஆவின் உதவி பொதுமேலாளர் (விற்பனை) சாந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.