கல்லூரி மாணவியிடம் 7 பவுன் நகை பறிப்பு

விழுப்புரத்தில் கல்லூரி மாணவியிடம் 7 பவுன் நகை பறித்த 2 வாலிபா்களை போலீசாா் வலைவீசி தேடிவருகின்றனா்.

Update: 2021-02-27 17:31 GMT
விழுப்புரம், 

கடலூர் மாவட்டம் திட்டக்குடி தாலுகா தொழுதூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் சிலம்பரசன் மனைவி சுமித்திரா (வயது 21). இவர் திருவண்ணாமலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவ கல்லூரியில் பி.பார்ம் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் இவர் நேற்று முன்தினம் கல்லூரிக்கு செல்ல திட்டக்குடியில் இருந்து பஸ்சில் புறப்பட்டு விழுப்புரம் புதிய பஸ் நிலையத்திற்கு வந்து இறங்கினார். பின்னர் விழுப்புரத்தில் இருந்து வேறொரு பஸ்சில் திருவண்ணாமலைக்கு செல்ல அந்த பஸ்கள் நிற்கும் இடத்தை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 25 வயது மதிக்கத்தக்க வாலிபர்கள் 2 பேர் திடீரென சுமித்திராவின் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் நகையை பறித்தனர். உடனே அவர் திருடன்... திருடன்... என கூச்சலிட்டார். அதற்குள் அந்த வாலிபர்கள் இருவரும் மின்னல் வேகத்தில் மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்று விட்டனர். பறிபோன நகையின் மதிப்பு ரூ.2 லட்சமாகும். இதுகுறித்த புகாரின் பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்துச்சென்ற வாலிபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 

மேலும் செய்திகள்