கன்டெய்னர் லாரி மோதி வாலிபர் நசுங்கி பலி

வாலாஜா அருகே கன்டெய்னர் லாரி மோதி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2021-02-27 17:29 GMT
வாலாஜா

வாலாஜா அருகே கன்டெய்னர் லாரி மோதி வாலிபர் பரிதாபமாக இறந்தார். 

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தை அடுத்த அத்திப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள். இவரின் மகன் கோபாலகிருஷ்ணன் (வயது 30). இவர், வாலாஜாபேட்டையை அடுத்த வி.சி.மோட்டூர் பகுதியில் சாலையோரம் நடந்து வந்து கொண்டிருந்தார். 

அப்போது  அந்த வழியாக வேகமாக வந்த ஒரு கன்டெய்னர் லாரி திடீெரன அவர் மீது மோதியது. அதில் அவர் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.

வாலாஜாபேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து விசாரணை நடத்தினர். கோபாலகிருஷ்ணனின் பிணத்தைக் ைகப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்