முத்துப்பேட்டை அருகே விவசாயி மூக்கை அரிவாள்மனையால் வெட்டிய மகன் கைது
முத்துப்பேட்டை அருகே விவசாயி மூக்கை அரிவாள்மனையால் வெட்டிய மகனை போலீசார் கைது செய்தனர்.
முத்துப்பேட்டை:-
முத்துப்பேட்டை அருகே விவசாயி மூக்கை அரிவாள்மனையால் வெட்டிய மகனை போலீசார் கைது செய்தனர்.
விவசாயி மூக்கை வெட்டினார்
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள தம்பிக்கோட்டை கீழக்காடு மஞ்சலங்காடு பகுதியை சேர்ந்தவர் வேலு(வயது 58). விவசாயி. இவருடைய மகன் பாலசுப்பிரமணியன்(33).
இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு நடந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் தந்தை, மகனுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த பாலசுப்பிரமணியன் அரிவாள் மனையால் தனது தந்தை வேலுவின் முகத்தில் தாக்கினார். இதில் அவருடைய மூக்கில் அரிவாள்மனை வெட்டியது.
மகன் கைது
இதனால் அவரது மூக்கில் இருந்து ரத்தம் கொட்டியது. படுகாயம் அடைந்த அவர் வலியால் அலறி துடித்தார். அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து முத்துப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலசுப்பிரமணியனை கைது செய்தனர்.
குடும்ப தகராறில் தந்தையை, மகன் அரிவாள் மனையால் மூக்கில் வெட்டியது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.