45 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்
விழுப்புரம் சரகத்தில் 45 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
விழுப்புரம்,
தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெறுவதையொட்டி இந்திய தேர்தல் ஆணையத்தின் கடிதத்தில் வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளின்படி விழுப்புரம் காவல் சரகத்தில் பணியாற்றி வரும் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கடலூர் முதுநகர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் விக்கிரவாண்டி போலீஸ் நிலையத்திற்கும், ராமநத்தம் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் விழுப்புரம் பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவுக்கும், அண்ணாமலை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் விழுப்புரம் பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவுக்கும், சிதம்பரம் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் கள்ளக்குறிச்சிக்கும், திட்டக்குடி ரமேஷ்பாபு விழுப்புரம் நகர போலீஸ் நிலையத்திற்கும், குறிஞ்சிப்பாடி ஷியாம்சுந்தர் ஆரோவில் போலீஸ் நிலையத்திற்கும், கடலூர் புதுநகர் உதயகுமார் பிரம்மதேசத்திற்கும், நெல்லிக்குப்பம் வீரமணி மயிலத்திற்கும், காட்டுமன்னார்கோவில் ராஜா கள்ளக்குறிச்சி மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவுக்கும், சேத்தியாத்தோப்பு ராமதாஸ் தியாகதுருகத்திற்கும், விழுப்புரம் நகர போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் கடலூர் புதுநகருக்கும், பிரம்மதேசம் சீனிபாபு அண்ணாமலை நகர் போலீஸ் நிலையத்திற்கும், ஆரோவில் மைக்கேல் இருதயராஜ் சேத்தியாத்தோப்புக்கும், மயிலம் பாபு திருக்கோவிலூருக்கும், விழுப்புரம் பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவில் இருந்த குருமூர்த்தி சின்னசேலம் போலீஸ் நிலையத்திற்கும், கண்டமங்கலம் காமராஜ் கச்சிராயப்பாளையத்திற்கும், விக்கிரவாண்டி சுரேஷ்பாபு கள்ளக்குறிச்சி மாவட்ட சமூகநீதி மற்றும் மனித உரிமை பிரிவுக்கும், விழுப்புரம் மேற்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி சிதம்பரம் நகர போலீஸ் நிலையத்திற்கும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த பழனி திருவெண்ணெய்நல்லூருக்கும், கச்சிராயப்பாளையம் பாலகிருஷ்ணன் நெல்லிக்குப்பத்திற்கும், சின்னசேலம் ராஜா கடலூர் முதுநகருக்கும், திருக்கோவிலூர் செல்வம் குறிஞ்சிப்பாடிக்கும், திருவெண்ணெய்நல்லூர் பாண்டியன் விழுப்புரம் குற்றத்தடுப்பு பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
பெண் இன்ஸ்பெக்டர்கள்
இதேபோல் பரங்கிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா கண்டமங்கலம் போலீஸ் நிலையத்திற்கும், கடலூர் குற்ற ஆவண பதிவேடுகள் துறை இன்ஸ்பெக்டர் சித்ரா விழுப்புரம் குற்ற ஆவண பதிவேடுகள் துறைக்கும், கடலூர் சமூகநீதி மற்றும் மனித உரிமை பிரிவு இன்ஸ்பெக்டர் துர்கா விழுப்புரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கும், நெய்வேலி மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா விழுப்புரம் பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவுக்கும், விருத்தாசலம் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருபாலட்சுமி திருக்கோவிலூர் மகளிர் போலீஸ் நிலையத்திற்கும், நெய்வேலி தெர்மல் இன்ஸ்பெக்டர் லதா விழுப்புரம் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவுக்கும், பண்ருட்டி மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் தாரகேஸ்வரி கோட்டக்குப்பம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் நிலையத்திற்கும், பண்ருட்டி மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வனஜா திண்டிவனம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் நிலையத்திற்கும், சேத்தியாத்தோப்பு மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அக்னேஸ்மேரி கள்ளக்குறிச்சி மாவட்ட பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவுக்கும், விழுப்புரம் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவில் இருந்த தேவி பரங்கிப்பேட்டை போலீஸ் நிலையத்திற்கும், விழுப்புரம் பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவில் இருந்த இளவழகி நெய்வேலி தெர்மல் போலீஸ் நிலையத்திற்கும், திண்டிவனம் மதுவிலக்கு அமல்பிரிவில் இருந்த கீதா கடலூர் மகளிர் போலீஸ் நிலையத்திற்கும், விழுப்புரம் மாவட்ட குற்ற ஆவண பதிவேடுகள் துறையில் இருந்த பூங்கோதை கடலூர் மாவட்ட குற்ற ஆவண பதிவேடுகள் துறைக்கும், விழுப்புரம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதிகா பண்ருட்டி மகளிர் போலீஸ் நிலையத்திற்கும், கோட்டக்குப்பம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஷ்ணுப்பிரியா நெய்வேலி மகளிர் போலீஸ் நிலையத்திற்கும், விழுப்புரம் மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா கள்ளக்குறிச்சி மாவட்ட குற்ற ஆவண பதிவேடுகள் துறைக்கும், விழுப்புரம் பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவில் இருந்த பிரபாபதி கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் நிலையத்திற்கும், விழுப்புரம் பொருளாதார குற்றப்பிரிவில் இருந்த ரேணுகாதேவி கள்ளக்குறிச்சி குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவுக்கும், திருக்கோவிலூர் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி திட்டக்குடி போலீஸ் நிலையத்திற்கும், கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேவதி விழுப்புரம் மேற்கு போலீஸ் நிலையத்திற்கும், தியாகதுருகம் மகேஸ்வரி ராமநத்தத்திற்கும், திருக்கோவிலூர் மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேவதி காடாம்புலியூருக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கான உத்தரவை விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. பாண்டியன் பிறப்பித்துள்ளார்.