அம்மா மினி கிளினிக்- அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார்

கோவில்பட்டி அருகே வடக்கு திட்டங்குளத்தில் மினி கிளினிக்கை, அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார்.

Update: 2021-02-27 13:14 GMT
கோவில்பட்டி, பிப்:
கோவில்பட்டியை அடுத்துள்ள வடக்கு திட்டங்குளம் கிராமத்தில் அம்மா மினி கிளினிக்கை அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றினார். இதனை தொடர்ந்து ரூ 4.5 லட்சம் செலவில் அமைக்கப்பட உள்ள சிமெண்டு சாலை பணியை தொடங்கி வைத்தார். பின்னர் மூப்பன்பட்டி கிராமத்தில் அம்மா நகரும் ரேஷன் கடையை திறந்து வைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்கினார். ஆவல்நத்தம் கிராமத்திலும் அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றினார்.நிகழ்ச்சியில் கோவில்பட்டி உதவி கலெக்டர் சங்கரநாராயணன், தாசில்தார் மணிகண்டன், சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் அனிதா, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் ஆர்.சத்யா, கோவில்பட்டி யூனியன் தலைவர் கஸ்தூரி சுப்புராஜ், துணைத் தலைவர் பழனிச்சாமி, அ.தி.மு.க. நகர செயலாளர் விஜய பாண்டியன், ஒன்றிய செயலாளர் அய்யாத்துரை பாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்