சிந்தாதிரிப்பேட்டையில் மின்விசிறியில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

சென்னை சிந்தாதிரிப்பேட்டை ரிச்சி தெருவைச் சேர்ந்தவர் ஜெயசங்கர். இவர், அதே பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி லட்சுமி (வயது 35). இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர்.

Update: 2021-02-27 12:01 GMT
லட்சுமி, மனநல பிரச்சினைக்கு கடந்த சில ஆண்டுகளாக அயனாவரத்தில் உள்ள மனநல காப்பகத்தில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. லட்சுமி, நேற்று முன்தினம் மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த சிந்தாதிரிப்பேட்டை போலீசார் லட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்