பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவிலில் மாசித்திருவிழா

பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவிலில் மாசித்திருவிழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2021-02-27 00:48 GMT
பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரம் காமராஜ் நகரில் அமைந்துள்ள வென்னிமலை முருகன் கோவிலில் மாசித்திருவிழா கடந்த 16-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு சமுதாயத்தினர் திருவிழாவை நடத்தினர். விழாவின் சிகர நாளான நேற்று 10-ம் திருவிழா நாடார் சமுதாய மண்டகப்படி சார்பில் நடைபெற்றது. காலை 8 மணிக்கு கீழப்பாவூர் சிவன் கோவில் மற்றும் பிள்ளையார் கோவிலில் இருந்து குறும்பலாப்பேரி, பனையடிப்பட்டி, பஞ்சபாண்டியூர், செட்டியூர், குருசாமிபுரம், கல்லூரணி, திப்பணம்பட்டி, அரியப்பபுரம், ஆரியங்காவூர், ஆவுடையானூர், பாவூர்சத்திரம் உள்பட 10-க்கும் மேற்பட்ட ஊர்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும் ஊர்வலமாக வந்தனர். 

ஊர்வலம் கோவிலை அடைந்ததும் மதியம் உச்சிகால பூஜை நடைபெற்றது. தொடர்ந்து மாலை வரை சிறப்பு பூஜைகள் நடந்தன. மாலை 5 மணிக்கு சிறப்பு புஷ்பாஞ்சலி, இரவு 8 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சுவாமி வீதிஉலாவும், நள்ளிரவு 12 மணிக்கு அர்த்தஜாம பூஜையும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று (சனிக்கிழமை) சுவாமி தீர்த்தவாரி நடைபெறுகிறது.

மேலும் செய்திகள்