புளியங்குடியில் நாளை ராகுல்காந்தி பிரசாரம்; ஏற்பாடுளை காங். மேலிட பார்வையாளர் ஆய்வு

புளியங்குடியில் நாளை ராகுல்காந்தி பிரசாரம் நடைபெறுவதையொட்டி அதற்கான ஏற்பாடுகளை காங்கிரஸ் மேலிட பார்வையாளர் தினேஷ்குண்டுராவ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2021-02-27 00:19 GMT
புளியங்குடி:
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி தென்காசி மாவட்டம் புளியங்குடியில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) பிரசாரம் செய்கிறார். புளியங்குடி கண்ணா திரையரங்க வளாகத்தில் விவசாயிகளுடன் அவர் கலந்துரையாடுகிறார். பின்னர் டி.என்.புதுக்குடி காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.

ராகுல்காந்தி கலந்து கொள்ளும் நிகழ்ச்சி நடைபெறும் இடங்களை காங்கிரஸ் மேற்பார்வையாளர்கள் சுசாந்த்மிஸ்ரா, மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் பட்டுக்கோட்டை மகேந்திரன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதேபோல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மேலிட பார்வையாளர் தினேஷ் குண்டுராவ் மற்றும் ஸ்ரீவல்லபிரசாத், ஒருங்கிணைப்பாளர்கள் லட்சுமி ராமச்சந்திரன், ஜான்சிராணி, மாவட்ட தலைவர் எஸ்.பழனி நாடார், மாவட்ட துணைத்தலைவர் வக்கீல் சங்கை கணேசன், நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் பால்ராஜ் ஆகியோரும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

மேலும் செய்திகள்