திருச்சி மாநகரில் போக்குவரத்து நெருக்கடியை தீர்க்க மாற்று திட்டம்-சமூக ஆர்வலர் செயல்விளக்கம்

திருச்சி மாநகரில் போக்குவரத்து நெருக்கடியை தீர்க்க மாற்று திட்டம் குறித்து சமூக ஆர்வலர் செயல்விளக்கம் காண்பித்தார்.

Update: 2021-02-26 22:02 GMT
திருச்சி, 
திருச்சி மாநகரில் பழைய பால் பண்ணை ரவுண்டானா, பொன்மலை ஜி கார்னர், வயலூர் சாலை ஆகிய இடங்களல் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இந்த பிரச்சினையை தீர்க்க ‘இன்டர்சேஞ்ச்’ என்ற பெயரில் ஒரு மாற்று திட்டத்தை சமூக ஆர்வலரும், சிவில் என்ஜினீயருமான ஹென்றி லாசர் என்பவர் நேற்று வெளியிட்டார். இதுதொடர்பாக செயல்விளக்கம் அளித்த அவர் பழைய பால்பண்ணை அருகில் ஒரு பாலம் கட்டவேண்டும். சமயபுரம் முதல் பாரதிதாசன் பல்கலைக்கழகம் வரையும், துவாக்குடியில் இருந்து பாலக்கரை வரையும், சோமரசம்பேட்டையில் இருந்து அரசு மருத்துவனை வரையும் லால்குடியில் இருந்து நம்பர் 1 டோல்கேட் வரையும் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கவேண்டும் என குறிப்பிட்டார்.

மேலும் செய்திகள்