பாபநாசம் அகஸ்தியர் அருவியில் குளிக்க அனுமதி அளிக்கப்படுமா? சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு

பாபநாசம் அகஸ்தியர் அருவியில் குளிக்க அனுமதி அளிக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Update: 2021-02-26 21:54 GMT
விக்கிரமசிங்கபுரம்:

பாபநாசம் அகஸ்தியர் அருவியில் குளிக்க அனுமதி அளிக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

அகஸ்தியர் அருவி

நெல்லை மாவட்டம் பாபநாசம் அகஸ்தியர் அருவியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் விழுவதால் மிகவும் பிரசித்தி பெற்றது. மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள இந்த அருவிக்கு செல்வதற்கு வனத்துறையிடம் அனுமதி வாங்க வேண்டும்.

கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக, பாபநாசம் அகஸ்தியர் அருவிக்கு செல்வதற்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. தற்போது ஊரடங்கு தளர்வில் சுற்றுலா தலங்கள் மீண்டும் திறக்கப்பட்டன. குற்றாலம் அருவியிலும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுடன் குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு

ஆனால் பாபநாசம் அகஸ்தியர் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு இதுவரையிலும் அனுமதி அளிக்கப்படவில்லை. தற்போது மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. 

இந்த பணிகள் இந்த மாதத்துடன் (பிப்ரவரி) நிறைவு பெறுகிறது.
எனவே அடுத்த மாதத்தில் (மார்ச்) இருந்தாவது பாபநாசம் அகஸ்தியர் அருவியில் குளிக்க அனுமதி அளிக்கப்படுமா? என்று சுற்றுலா பயணிகள் எதிர்பார்த்து உள்ளனர்.

மேலும் செய்திகள்