சேலத்தில் முடிதிருத்தும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி சேலத்தில் முடிதிருத்தும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Update: 2021-02-26 21:22 GMT
சேலம்:
சேலம் மண்டல முடிதிருத்தும் தொழிலாளர்கள் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் நேற்று கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சங்க மாவட்ட செயலாளர் வெங்டசாலம் தலைமை தாங்கினார். மண்டல தலைவர் ரமேஷ் முன்னிலை வகித்தார். இதில் கல்வி, வேலை வாய்ப்பில் 5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். சட்டபாதுகாப்பு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் முடிதிருத்தும் தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இது குறித்து போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கூறியதாவது:-
எங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகிறோம். ஆனால் கோரிக்கை நிறைவேறவில்லை. எனவே கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இன்று (நேற்று) ஒரு நாள் சேலம் மண்டலம் முழுவதும் சலூன் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். எனவே தமிழக அரசு எங்கள் கோரிக்கைளை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்று கூறினர். 

மேலும் செய்திகள்