போதிய பஸ்கள் ஓடாததால் பள்ளி மாணவர்கள் அவதி

வத்திராயிருப்பில் போதிய பஸ்கள் ஓடாததால் பள்ளி மாணவர்கள் அவதி அடைந்தனர்.

Update: 2021-02-26 20:03 GMT
வத்திராயிருப்பு,
வத்திராயிருப்பில் போதிய பஸ்கள் ஓடாததால் பள்ளி மாணவர்கள் அவதி அடைந்தனர்.
வேலை நிறுத்தம்
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை பள்ளிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகளில் வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கான்சாபுரம், நெடுங்குளம், கூமாப்பட்டி, சேது நாராயணபுரம், சுந்தரபாண்டியம், மகாராஜபுரம், தம்பிபட்டி, இலந்தைகுளம், கோட்டையூர்.வ.புதுப்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்ததில் ஈடுபட்டனர். .இதனால் குறைந்த பஸ்களே ஓடின. நேற்று 2-வது நாளாக போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.போதிய பஸ்கள் ஓடவில்லை.
மாணவர்கள் அவதி
 இந்த நிலையில் நேற்று மாலையில் வத்திராயிருப்பு பள்ளிகளில் வகுப்பு முடிந்ததும் மாணவர்கள் தங்கள் வீடுகளுக்கு செல்ல பஸ் நிலையத்திற்கு நடந்து வந்தனர். சுற்றுவட்டார கிராமங்களுக்கு செல்ல பஸ்கள் இயக்கப்படாததால் மணிக்கணக்கில் பஸ் நிலையத்தில் மாணவ-மாணவிகள் காத்து கிடந்தனர். பின்னர் தனியார் பஸ்களில் முண்டியடித்து கொண்டு ஏறி தங்கள் வீடுகளுக்கு சென்றனர். பலர் தங்கள் கிராமங்களுக்கு பஸ்கள் செல்லாததால் மிகவும் அவதிப்பட்டனர்.

மேலும் செய்திகள்