முடிதிருத்தும் தொழிலாளர் நலச் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம்
முடிதிருத்தும் தொழிலாளர் நலச் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
கரூர்
உள் ஒதுக்கீட்டில் 5 சதவீதம் மருத்துவர் சமூகத்திற்கு சட்டபாதுகாப்பு வேண்டி நேற்று கரூர் தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு மருத்துவ நல சங்கம் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர் நலச் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் கந்தசாமி தலைமை தாங்கினார். நகர தலைவர் சீனிவாசன், துணைத்தலைவர் ரகுபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் குப்புசாமி, பொருளாளர் சுரேஷ் உள்பட நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டனர்.