கட்டுமாவடி மார்க்கெட்டில் பாறை மீன் விற்பனை

கட்டுமாவடி மார்க்கெட்டில் பாறை மீன் விற்பனை

Update: 2021-02-26 19:06 GMT
மணமேல்குடி:
மணமேல்குடி அடுத்த கட்டுமாவடியில் பெரிய மீன் மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட்டிற்கு விசைப்படகு, நாட்டுப்படகில் பிடிக்கப்படும் மீன்கள், இறால்கள், நண்டுகள் விற்பனைக்கு வருகின்றன. இந்த, மீனை வாங்குவதற்கு ஏராளமான வாடிக்கையாளர்களும், வியாபாரிகளும் வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2 நாட்களாக பாறை மீன்கள் அதிகமாக விற்பனைக்கு வந்துள்ளன. இந்த பாறை வகை மீன் அதிக ருசி கொண்டதால், ஏராளமான வாடிக்கையாளர்கள் மார்க்கெட்டிற்கு மீன்கள் வாங்க குவிந்தனர். மேலும் அதிகளவு பாறை மீன்களை வாங்கி செல்கின்றனர்.

மேலும் செய்திகள்