அ.தி.மு.க. பிரமுகர் விபத்தில் பலி
அ.தி.மு.க. பிரமுகர் விபத்தில் பலியானார்
குளித்தலை
குளித்தலை அருகே உள்ள கண்டியூர் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 39). அ.தி.மு.க. பிரமுகர் இவர் குளித்தலை அருகே உள்ள கீழகுறப்பாளையம் பகுதியைச் சேர்ந்த மனோகரன் (43) என்பவருடன் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு நேற்று முன்தினம் குளித்தலை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். மேட்டு மருதூர் - மருதூர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, முன்னே சென்ற ஒரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்ற போது, எதிர்பாராதவிதமாக கீழே விழுந்துள்ளனர். இதில் படுகாயமடைந்த இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற பின்னர் மனோகரன் திருச்சி அரசு மருத்துவமனையிலும், சிவக்குமார் திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இதுகுறித்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிவக்குமார் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.