தளி அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

தளி அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை

Update: 2021-02-26 18:00 GMT
தேன்கனிக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே உள்ள கெம்பத்தப்பள்ளியை சேர்ந்தவர் அந்தோணிசாமி (வயது 25). விவசாயி. இவருக்கும், இவரது மனைவிக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்தது. இதனால் கோபித்துக் கொண்டு அந்தோணிசாமியின் மனைவி பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் மனமுடைந்த அநதோணிசாமி விஷம் குடித்து விட்டு மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பிறகு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அந்தோணிசாமி சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார். இது குறித்து தளி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்